" alt="" aria-hidden="true" />
உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு வழங்கினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுவால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கட்டிட பணியாளர்கள், தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என அறிந்து அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை உணவு அளித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இப்பணியை தொடர்ந்து செய்வேன் என்று கூறினார். இப்படியும் ஒரு காவல் துறை ஆய்வாளரா என்று இவரது சேவையை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகவும் பாராட்டினார்கள்.
" alt="" aria-hidden="true" />